அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், வீடற்றவர்களுக்கு காணிகளுடன் வீடு!

0
154

அம்பாறை திருக்கோவில்-4, மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடற்று வாழ்ந்து வந்த ஜந்து குடும்பங்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப்படட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்
நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட சீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கனடா குமரன் விளையாட்டு கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒரு வீடு 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
பயனாளிகளுக்கான காணி, பிரதேச செயலக காணிப்பிரிவு ஊடாக வழங்கப்பட்டது.
வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில்பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து கொண்டு,
அடிக்கல்லினை நாட்டினார்.
உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிராம சேவகர் எஸ்.சடாட்சரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.முரளிதர்சன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.