அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் இடப்பற்றாக்குறைக்குத் தீர்வு

0
104

அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம், இடப்பாற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கிய நிலையில், மாகாண மீன்பிடித் திணைக்களத்திற்குச்
சொந்தமான கட்டடமொன்று, அலுவலக செயற்பாடுகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் நீண்ட காலமாக, இடப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தது.
இது தொடர்பில் கல்வி அதிகாரிகளால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட
நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரால், கிழக்கு மாகாண ஆளுநருக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது.
கடந்த 13ம் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம,
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, விவாசாய மீன்பிடி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா, மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா, மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோருடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அதில், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடமொன்று அமையப்பெறும் வரை, மீPன்பிடித்திணைக்களத்திற்குச் சொந்தமான கட்;டத்தைப்படுத்துவது என
சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானத்திற்கு அமைய இன்று கட்டடம் கல்வித் திணைக்களத்திற்குக் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.உதயகுமார், கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்கள அம்பாறை மாவட்ட
உத்தியோகத்தர் அ.ரதன், பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன், திருக்கோவில் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சு.று.கமலராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.