அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி மையத்தின் குப்பை மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பம்

0
14

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகே பாரிய குப்பை மேடு காணப்படும் நிலையில், அதனை அகற்றும் பணிகள், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, குப்பை மேட்டை அகற்றும் ஆரம்பிக்கப்பட்டன.

அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், இங்கு கொண்டு வந்து தொடர்ச்சியாகக் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளதோடு, குப்பை மேட்டில் உணவு உண்பதற்காக வருகை தரும் யானைகளால், யானை-மனித மோதல்களும் பதிவாகின்றன.
இந்நிலையிலேயே குப்பை மேட்டை அகற்றும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.