அம்பாறை மாளிகைக்காடு மொத்த மீன்; வியாபாரிகளுக்கான விசேட கருத்தரங்கு காரதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் தலைமையில் மாளிகைக்காடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

இதன்போது மொத்த மீன். வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் விபரங்கள் பற்றியும், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மீனவர்கள் கடுமையான சுகாதாரவிதி முறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் வேகமாகபரவிவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்க்கு சுகாதாரப் பிரிவினரால் பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.