அம்பாறை மாவட்டம் மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கல்

0
142

அம்பாறை மாவட்டம் பொது மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயளலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களான காரைதீவு மாவடிப்பள்ளி மாளிகைக் காடு போன்ற பிரதேசங்களில் 80 குடியிருப்பாளர்களுக்கு நேற்று இக்காணி ஆவனங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றம் காணி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி. திசநாயக்க, கிழக்கு மாகாண பிரதி ஆணையாளர் ஜீ.ரவிராஜன், காணி உத்தியோகஸ்தர் கே.எல்.எம். முஸாமில், பிரதி கணக்காளர்,பொது மக்கள், பிரதேச செயலக உத்தி யோகஸ்ர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.