இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமையினை கருத்திற் கொண்டு 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம் தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டு நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது.
இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள இளைஞர் கழக சம்மேளனத்தினால் 10 கட்டில்கள் வீதம் தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 50,000 ரூபா நிதியுதவியுடனும் ஏனைய நிதிகள் தனவந்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்போடு குறித்த கட்டில்கள் யாவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குறித்த திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 200 கட்டில்கள் தயார் செய்யப்படுவதுடன் இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்காக தயார் செய்யப்படும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.