அரச கதிரியக்க தொழினுற்பவியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொவிட் தெற்றில் இருந்து பாதுகாப்பு பெற உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச கதிரியக்க தொழினுற்பவியலாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் தர்மகீர்த்தி எபா தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 18 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் அவர் அதில் 14 பேர் தேசிய வைத்தியசாலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.
தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தனியான ஒரு வோடை வழங்க வேண்டும் அல்லது அவர்களின் வீடுகளில் சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´ஒரு நோயாளியேனும் எமது தொழிற்சங்க போராட்டத்தால் இறக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டே எமது தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அச்சமடைய அவசியமில்லை. எமது தொழிற்துறை இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எமது அங்கத்தவர்களுக்கு கொவிட் காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைப்பதில்லை´ என்றார்.