அரசியலமைப்பை மீறிய ஆளுநர் பதவிவிலகவேண்டும்!தவராசா சீற்றம்,

0
165

அரசியல் அமைப்பை பேணிப் பாதுகாப்பேன் எனச் சத்தியம. செய்து பதவி ஏற்ற வடக்கு ஆளுநர் அதனை மீறினார் என்பது சட்டமா அதிபரின் நீதிமன்ற சமர்ப்பனம் மூலம் எண்பிக்கப்படுவதனால் ஆளுநர் ஜீவன் தியாகராஜா உடனடியாக பதவி விலக வேண்டும என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் மீன்பிடி அமைச்சரின் செயலாளருமான சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலா பணியகம் மற்றும்  வாழ்வாதார முகாமைத்துவ  நியதிச்
சட்டங்கள் என இரு சட்டங்களை வர்த்தமானியில் பிரசுரித்தார். இதற்கு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடுத்த வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையானவர் வடக்கு ஆளுநருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டதான விடயத்தின் மூலம்  ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை என்பது தெளிவாகின்றது.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அறிந்துகொள்ளாமல் ஆளுநராக பதவியேற்றிருந்தாலும் அதன் பின்பு அறிந்திருக்க வேண்டும அல்லது ஆலோசணையை ஏற்றிருக்க வேண்டும மாறாக இப்படி நீதிமன்றம் சென்று மூக்குடைபட்ட பின்பும் அப் பதவிக்கு ஆசைப்படக்கூடாது. உண்மையில் எப்போது அரசியல் அமைப்பை மீறி நடந்தமை கண்டுகொள்ளப்பட்டதோ அப்போதே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

இருப்பினும் அதனை தற்போதைய ஆளுநரிடம் இருந்து அறவே எதிர்பாரக்க முடியாது ஏனெனில் அவருக்கு சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது என்றார்.