அரசியலுக்காக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி!

0
260
rbt

நல்லாட்சி காலத்தில், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏனையவர்களையும் விடுவிக்க, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், முயற்சி எடுத்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில், அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.