அறிமுக நாயகன் கே.ஜெ.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0
11

திரைப்பட தயாரிப்பாளரான கே.ஜெ.ஆர். கதையின் நாயகனாக அறிமுகமாகும்  ‘அங்கீகாரம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் JP. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் கே ஜெ ஆர், சிந்தூரி, விஜி வெங்கடேஷ் , ரங்கராஜ் பாண்டே , மன்சூர் அலிகான்,  அஜித் கோஷி,  விமல் , எசபெல்லா, ஷான்,  தீபிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.

விளையாட்டுத் துறையின் பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரசாந்த் – அஜித் பாஸ்கர் – அருண் முருகன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் கே ஜெ ஆர் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து,  நீதிமன்ற பின்னணியில் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.