அறுகம்பை பகுதியில் மீண்டும் சுற்றுலா பிரயாணிகளின் வருகை

0
274

அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மீண்டும் அதிகரித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2019 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் கொவிட் – 19 நோய்தொற்று பொருளாதார நெருக்கடிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன் உல்லாச பிரயாணிகளின் வருகையும் குறைவடைந்தது.

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன் தற்போது ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனிடையே, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையால் தமது வருமானம் மீளவும் வழமைநிலைக்கு திரும்பி வருவதாக சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் புரிவோர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரசே செயலகப் பிரிவில் அறுகம்பே இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் இது மிகவும் புகழ்பெற்ற ஒரு இடம் என்பதுடன் 1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அறுகம்பே, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.