
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள பன்றி இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
இதேவேளை, ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.