மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுஎழியினை கிரம சேவையாளர் பிரிவில் உள்ள ஸ்ரீ காலிகா மடு கற்பக விநாயகர் ஆலய வளாகத்தின் வேலி உடைக்கப்பட்டமைக்கு எதிராக அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறுவடை காலம் நெருங்கி உள்ளதினால் அறுவடை செய்யப்படும் நெல்லினை இலகு வழியில் கொண்டு செல்வதற்கு
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களினால்,
செங்கலடி ஊறுகாம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க,
ஆலய வளாக வேலியினை அகற்றி வயல் நிலத்திற்கு செல்வதற்கான பாதையினை அமைப்பதற்கு,
செங்கலடி ஊறுகாம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆலய வளாகத்தின் வேலியினை உடைத்து வளாகத்தின் குறுக்கே பதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே
ஆலய மதகுரு, ஆலய நிர்வாகிகள் மற்றும் அப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்ட இடத்திற்கு வருகைதந்த விவசாய அமைப்பின் உறுப்பினரொருவருக்கும், போராட்டத்தில்
ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இருதரப்பினருக்கிடையில் இடம் பெற்ற கலந்துரையாடல் தொடர்ந்து 12 அடி வீதியும் 10 அடி மதில் அமைத்து தருவதாக
எழுத்து மூலமாக வாக்குறுதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்ததையடுத்து,
போராட்டம் கைவிடப்பட்டது.