ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க
எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்

0
202

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்றிரவு வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில்
எரிபொருள் வழங்கப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிசாரின் மேற்பார்வையோடு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.

எரிபொருள் நிலையத்திற்கு ஒரு மாதகாலத்திற்கு மேலாக பெட்றோல் வழங்கப்படாத நிலையில் நேற்று வழங்கிவைக்கப்பட்ட 6600 லீற்றரும் விநியோகப்பட்ட நிலையில் நீண்டவரிசையில் இரு நாட்கள் காத்திருந்த பொதுமக்கள் எரிபொருள் கிடைக்கப்பெறாது திரும்பிசென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு எரிபொருள ;வழங்கும் போது ஏனையவர்கள் உள்வாங்கப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.