“இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து”- நாடாளுமன்றத்தில் சஜித்

0
15

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் குழப்பநிலையேற்பட்டது.

இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்தி;ற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டமொழுங்கை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு எதிர்கட்சி தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.