இந்திய தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது கப்பல் கொழும்பை வந்தடைந்தது!

0
192

இந்திய – தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது கப்பல் கொழும்பை வந்தடைந்தது.

3 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதி மிக்க மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

இதில் 15000 மெட்ரிக்தொன் அளவான அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.

இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.