ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தவித ஆக்கபூர்வமானதீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரயோசனம் இல்லை என்பதால் ஜனாதிபதியுடன் சந்திப்பை புறக்கணித்தோம் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்கள் சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் ஆறுதிரு முருகன் கலந்து கொள்ளலாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன் என்னையும் சந்தித்திருந்தார்
அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம்
அவற்றை உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம் ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை
அதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் இலங்கை இந்துமன்றத்தின் உப தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளர் ஆகிய கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்
மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை
அதே போல சர்வ மத தலைவர்களின் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதேபோல எங்களது அடையாள அட்டை இலக்கங்களும் அதிகாரிகளால் கேட்கப்பட்டது
ஆனால் ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியினால் எந்தவித ஆக்கபூர்வமானதீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரயோசனம் இல்லை என்பதனாலேயே நானும் நல்லை ஆதீன குருமுதல்வரும் இன்றைய ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்