கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.