இலங்கை அரசாங்கத்தை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம்

0
128

இலங்கை அரசாங்கத்தை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்; காலவரையற்ற வேலை நிறுத்தப்போரட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும் தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை, படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுமே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், சுமார் ஒரு இலட்சத்துக்கும்; மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் அடுத்தக்கட்ட போராட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.