இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

0
224

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கும் திட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களிற்கு 18 ஆயிரம் ரூபா பெறுமதியான பவுச்சர்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை தலைவர் எஸ்.சேதுபதி, செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வழங்கப்பட்ட பவுச்சர்கள் மூலம், மருந்து பொருட்கள், உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் ஊடாக கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நலிந்த குடும்பங்களிற்கான உதவிகள் இவ்வாண்டு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.