இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்க மட்டக்களப்பு கிளையின் வருடாந்த விருது வழங்கும் விழா

0
133

இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் வருடாந்த விருது வழங்கும் விழா நேற்று மாலை
மட்டக்களப்பில் நடைபெற்றது.
விழாவில் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டிட நிர்மாணிகளுக்கான விருதை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவர்
ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்,
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.சிவலிங்கம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாவட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மாவட்ட கட்டட நிர்மாண
ஒப்பந்தகாரர்கள், நிபோன் பெயிண்ட் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இலங்கையில் தேசிய நிர்மாண சங்கம், கட்டட ஒப்பந்தக்காரர்களை அங்கத்தவர்களாக கொண்டு நாட்டின் அபிவிருத்தியில் சிறந்த பங்காற்றி வருவதுடன் அங்கத்தவர்களின்
நலன்களிலும் அக்கறையுடன் செய்யப்பட்டு வருகின்றது .
நிபோன் பெயிண்ட் நிறுவன பிரதான அனுசரணையில் கட்டட நிர்மாண துறை ,வீதி அபிவிருத்தி, பாலம் நிர்மாணம் ,நீர்ப்பாசன குளங்கள் நிர்மாணம் ஆகிய பிரிவுகளில்
சிறந்த நிர்மாணிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.