இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

0
25

2024 ஒக்டோபர் மாதத்தில்இ இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.செப்டம்பர் 2024 இல் 5994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களின் அளவு ஒக்டோபர் 2024 இன் இறுதியில் 6467 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.இது 7.9% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில் 7.3% அதிகரித்து 6383 மில்லியன் டொலராக இருந்தது.செப்டம்பர் 2024 இல் இந்த எண்ணிக்கை 5949 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டது.இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்கம் கையிருப்பு 5.8% அதிகரித்து 42 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்ட சிட்டைகளும் அடங்கும் இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமானதாகும் அதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டது.2020 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6 பில்லியன் டொலரைக் கடந்துள்ளமை சிறப்பம்சமாகும்.