Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்தார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பௌத்த நாடுகளான தாய்லாந்து மற்றும் இலங்கை பௌத்த விவகாரங்கள் தொடர்பான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும், வணக்கத்துக்குரிய சோம்தேஜ் அரியவோசோகதாயன் தேரரின் 96ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை இந்நாட்டின் மஹாசங்கத்தினரின் பங்குபற்றலுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசயநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.