இலங்கைக்கு அவசியமான பொருளை ஏற்றுமதி செய்யும் இந்தியா!

0
70

இந்திய அரசாங்கத்தின் அண்டைய நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையின் படி, இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஆயிரக்கணக்கான மெற்றிக் டன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காயத்துக்கான அதிக நிரம்பலை ஏற்படுத்தவும் அதிகளவில் பெரிய வெங்காயத்தை கையிருப்பில் பேணுவதற்கும் இந்தியா எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதற்கான ஏற்றுமதிக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.