இலங்கைக்கு உலக வங்கி மேலும் நிதி உதவி!

0
106
World Bank on glass building. Mirrored sky and city modern facade. Global capital, business, finance, economy, banking and money concept 3D rendering illustration.

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது.
இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ்,
இலங்கையின் சுகாதாரத்துறை திறன் சிறப்பாக உள்ளபோதிலும், வளரும் சுகாதார சவால்களுக்குத் தாயாராகும் வகையில் சக்திமயப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியின் மூலம் மக்களை மையப்படுத்தியதும், உடன் செயலாற்றக்கூடியதுமான சுகாதார சேவையின் முன்னோக்கிய நகர்வை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.