இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமான போயிங் அதிகாரிகளுடன், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடினார். அமெரிக்கா மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டாண்மை இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியமாகும். இதன் அடிப்படையில் இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளை தாம் நேற்று சந்தித்தாக தூதுவர் ட்வீட் செய்துள்ளார். முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமாக போயிங் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு வணிக விமானங்கள் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் விண்வெளி அமைப்புகளை உருவாக்கி தயாரித்து மற்றும் சேவை செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.