இலங்கையில் கடற்கொள்ளையர்களா? வெளியான அதிர்ச்சி செய்தி!

0
133

இலங்கை கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில், ஒருவர் வாள் வெட்டுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மீன்பிடிக்க சென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, கட்டையுடன் சென்று தாக்குதல் நடத்தியதாகவும், இதன் போது, படகு உரிமையாளர் முருகன் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.