இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்

0
237

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (18) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும், கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.