தமிழ்த் தேசிய பின்னடைவிற்கும் மக்கள் நம்பிக்கை இழந்தமைக்கும் இளைஞர்களை புறந்தள்ளியமையே காரணம் என தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன், தமிழ்த் தேசியத்தின் பால் சிதைந்துபோன நம்பிக்கையை இளைஞர்களால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து அல்லது அந்த பயணத்தில் இருந்து தடம்மாறுவதானது எமது தாயக கோட்பாட்டையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலிக்கின்றமைக்கு ஒப்பானதாகும். எனவே தமிழ்தேசியத்தை பாதுகாத்து தமிழர் தாயககோட்பாட்டை நிலைநிறுத்தி அதனை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்வதற்கான பணியினை இளைஞர்களால் மாத்திரமே செய்யமுடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.