உடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு விசமிகளால் தீவைப்பு!

0
198

உடுவில் தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு விசமிகளால் தீவைப்பு – இருபதுக்கும் மேற்பட்ட பனைகள் அழிவு – பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு விசமிகளால் தீவைப்பு வைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் அழிவுற்றுள்ளது. மாநகர தீ அணைப்பு சேவையூடாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இவ் பனை மரங்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக துரித விசாரனைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவராஜா துவாரகன் பொலீசாரினை கேட்டுக்கொண்டுள்ளார்.