உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தகவல்!

0
10

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிவதற்காக 40 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.அதில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சை குழுக்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுஜன ஐக்கிய முன்னனி நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.அதற்கமைய குறித்த மாவட்டத்தில் 5 நகரசபைகளுக்கும் 3 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்துக்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர்களிடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டஇ தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க முன்னர் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தில் 110 மில்லியன் ரூபாய் இதுவரை மீள செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.