எதிர்க் கட்சிகள் கறுப்புப் பட்டியணிந்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு!

0
124

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று ஆரம்பமான 9ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை, எதிர்க் கட்சிகள் புறக்கணித்துள்ளதுடன் பாராளுமன்ற வளாகத்தில் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, விமல் வீரவன்ச – உதய கம்மன்பில ஆகியோர் தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்தன.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மேலவை இலங்கை கூட்டணி, சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கறுப்புப் பட்டி அணிந்தவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, அனுர பிரியதர்சன யாப்பா, டிலான் பெரோ, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.