எல்ல வனப்பகுதியில் கடும் காற்று காரணமாக வேகமெடுக்கும் தீப்பரவல்!

0
13
Forest fire in Ella, Sri Lanka

எல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தீப்பரவல் இராவணா எல்ல பகுதியை நோக்கி பரவிச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் எல்ல பிரதேச செயலாளர் காரியாலய உத்தியோகத்தர்கள் தியத்தலாவ வான் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.