ஏறாவூர் நகர சபைக்கான புதிய
தவிசாளர் தெரிவு இடம்பெற்றது

0
133

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக எம்எஸ்எம். சுபைர் இன்று திருவுளச்சீட்டு குலுக்கல்
மூலமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனார்.
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்த எம்எஸ்.நழீம் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட
இவ்வாண்டிற்கான வரவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் பதவியிழந்தார்.
புதிய தவிசாளர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில்
நடைபெற்றது.
எம்.எஸ்.எம்.சுபைர் மற்றும் கே.இப்திகார் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தனர்.
தவிசாளர் தெரிவு திறந்த வாக்கெடுப்பு அடிப்படையில் இடம்பெற்றபோது,
இருவருக்கும் தலா எட்டு வாக்குகள் கிடைத்தன.
இதனையடுத்து, திருவுளச்சீட்டு குலுக்கல் முறை மூலம், முகமட் சரீப் முகமட் சுபைர்
தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தவிசாளர் தனது பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து நிலத்தில் சிரம் தாழ்த்தி இறைவனுக்கு நன்றி செலுத்திய
பின்னர் தவிசாளர் ஆசனத்தில் அமர்ந்தார்.