கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை ஏறாவூர் பிரதேச செயலகம், நகர சபை,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,பொலீசார் என்பன கூட்டிணைந்து முன்னெடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச மக்களை பாதுகாக்கும் வகையிலான
கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியின் உயர் மட்ட கூட்டம் ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஏதுவான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும்பொதுமக்களை விழிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.