க.பொ.த.உயர்தரப் பரீட்சை: மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 71 வீத மாணவர்கள் பல்கலைக்ககழத்திற்குத் தகுதி!

0
200

மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்துடன்
ஒப்புடுகையின் 6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில், மாவட்ட மற்றும் தேசிய நிலைகளில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டவர்களை இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் சந்தித்து
பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
உயிரியல்துறையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் சாசாங்கன் மாவட்ட நிலையில் முதலிடத்தையும், சிசிலியா பெண்கள் உயர் தரப் பாடசாலை மாணவி அபிஷேகா மாவட்ட நிலையில் இரண்டாம் இடத்தையும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் ஷேஸ்னு மாவட்ட நிலையில் நான்கம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 20 மாணவ மாணவிகள் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய பாடத்துறைகளிலும் மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்கள் சாதனை படைத்துள்ள நிலையில், அவர்களை நேரில் அழைத்து வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.