நாட்டில் கலவரங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பட்டலந்தை உள்ளிட்ட சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்களைக் கொலை செய்ததாக இந்திராந்த சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு ஈடுபட்டார் என்பதை இந்திராந்த சில்வா தனது கண்களால் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொலைகள் நடப்பதற்கு முன்பு இந்த முன்னாள் இராணுவ அதிகாரி புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்தக் குற்றங்கள்குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக இந்திராந்த சில்வா மேலும் கூறினார்.