கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாலும் நாட்டை நிர்வகிக்கமுடியாது: பந்துல குணவர்த்தன

0
108

வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றால் மாத்திரமே இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் வெளிநாடுகளில் கடன் பெற்றே அரச நிர்வாகத்தை முன்னெடுத்தன.
பெற்றுக்கொண்ட கடன்களை மீள்செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டவுடன் அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்கள் கடன் வழங்கலை இடைநிறுத்தின.
இதனால் அபிவிருத்தி பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.
அரசமுறை கடன்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானமிக்க பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேசிய ஒப்பந்தகாரர்கள் அவர்களின் நிதியை கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததும் தேசிய ஒப்பந்தகாரர்களுக்குரிய நிதி முழுமையாக செலுத்தப்படும் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.