கடற்றொழிலாளரின் படகு, இயந்திரம், 3 வள்ளங்கள், வலைகள் தீக்கிரை!

0
211

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் கடற்றொழிலாளருக்கு சொந்தமான படகு, இயந்திரம், 3 வள்ளங்கள் மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
இதனால் படகு, இயந்திரம், வள்ளங்கள் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வள்ளங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும் 4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட படகு, இயந்திரம், வள்ளங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவம் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.