கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் மாயம்!

0
223

மாத்தறை – வெலிகம பகுதியில் கடலில் நீராடச் சென்ற 4 மாணவிகளில் இருவர் இன்று முற்பகல் காணாமல்போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வெலிகம பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள இரு மாணவிகளையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.