ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இயங்கும் வகையில் கொழும்பு – கோட்டையில் இருந்து கண்டிக்கு விசேட சொகுசு கடுகதி தொடரூந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விசேட சொகுசு சுற்றுலா தொடரூந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.