கம்பஹா மாவட்டம் படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இயங்கிய கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
படுகாயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.