கம்பஹா பொதுசுகாதார வைத்திய அதிகார பிரிவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, பொதுசுகாதார வைத்திய அதிகாரி சுஹாஸ் சுஹசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் 70 முன்னெடுக்கப்பட்டன.
எனினும் தடுப்பூசியின் முன்னேற்றம் 20 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது.
நேற்று முன்தினம் எழுமாறாக 70 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை உடனடியாக பெற்றுக்கொள்வதே சிறந்தது.
மூன்றாவதுத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லையாயின் மீண்டும் ஒரு கொரோனா அலைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.