கல்முனை நகர்புறத்தில் திருட்டு சம்பவம்

0
340

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர நகர்புறத்தில் உள்ள மூன்று கடைகளில் நேற்றிரவு திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் தலைக்கவசம் விற்பனை நிலையம் இரும்பு விற்பனை நிலையம் என்பவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அன்பு முஹைதீன் றோசன் அக்தர் சத்தார் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ.சத்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து கல்முனையின் சில பிரதேசங்கள் நேற்றிரவு முற்றாக முடக்கப்பட்டு இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த 3 கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.