கல்முனை மாநகர சபை கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டம்

0
220

கல்முனைப் இஸ்லாமாபாத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களின் மலசலகூட குளியலறை கழிவு நீர் அருகாமையிலுள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு நிலங்களிலும் பிரதான வீதிகளிலும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலும் வழிந்தோடுவதை எதிர்த்து கல்முனையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனைப் பிரதேச செயலகத்தின் நுழைவாசல் கதவுகளைப்பூட்டி அதன் முன்பாக பிரதேசக் குடியிருப்பாளர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இது தொடர்பாக பலமுறை எழுத்து மூலம் மாநகர சபை ஆணையாளருக்கும் கல்முனைப் பிரதேச செயலாளாருக்கும் அறிவிக்கப்பட்டும் இதுவரைக்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாபடவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.