காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான இரவுநேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 10 ம் திகதிமீள ஆரம்பம்!

0
134

காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இரவுநேர தபால் ரயில் சேவை மீள எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட ICF ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு ஈடுபடுத்தப்படவுள்ளது. தினமும் இரவு 10 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் காலை 6 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடையும். இதேபோல் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 6 மணியளவில் கொழும்பு கோட்டையை சென்றடையும்.

முன்பு சாதாரண பெட்டிகள் இணைத்து தபால் ரயில் சேவையாக இடம்பெற்ற நிலையில் தற்போது முதல் வகுப்பு 10 குளிரூட்டப்பட்ட ஆசங்களைக் கொண்டதாகவும், இரண்டாம் வகுப்பு வழக்கமான இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் கொண்டுள்ளது. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இல்லை.

இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி ரயில் சேவை 12 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளது.