மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் இருவருக்கிடையில் நேற்று இடம் பெற்ற கை கலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காங்கேயனோடையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43வயதுடைய நபர் என காததான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்..றிஸ்வான் சம்பவம் இடம் பெற்ற இடத்தினை பார்வையிட்டார். பிரேதப் பரிசோதனைகளை மேற் கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முனனெடுத்துள்ளனர்.