காத்தான்குடி சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

0
381

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் நண்பகல் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இதன்போது தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலையின் அனைத்து தொழில் சார் ஊழியர்களும் இந்த கவனயீர்ப்புபோராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் பெறாமையால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

எனவே, அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எவ்வாறாயினும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சுகாதாரத் துறை ஊழியர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.