காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர
பாடசாலையின் மாணவிகள் ஒன்றுகூடல்

0
154

மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவிகளின் ஒன்று கூடல் நேற்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இப்பாடசாலை 2028ம் ஆண்டு நூற்றாண்டை அடையவுள்ள நிலையில் பாடசாலையின் கடந்த கால தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் திட்டங்கள் தொடர்பில் பாடசாலையின் அதிபர் ஜெஸிமா முஸம்மில் பழைய மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இப்பாடசாலையின் கடந்த கால நிலைகள் தற்போதைய பௌதீக சூழல் கல்வி அடைவு மட்டம்,
பல்கலைக்கழகத்துக்கு வருடாந்த செல்லும் மாணவிகளின் எண்;ணிக்கை தொடர்பிலும் அதிபர் தெளிவுபடுத்தினார்.

ஒன்றுகூடலின் போது இப்பாடசாலையில் 1946 ஆண்டு தொடக்கம் 1951 ஆண்டு வரை கல்வி கற்று தற்போது 83 வயதான இப்பாடசாலையின் பழைய மாணவி ஆதம்லெவ்வை ஹலீமா உம்மாவை மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தார்.

ஓன்று கூடலுக்கு வருகை தந்த பழைய மாணவிகள்
கல்வி கற்ற ஆண்டு ரீதியாக குழுக்களை அமைத்ததுடன் அதற்கான இணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பாடசாலையின் அதிபர் ஜெஸிமா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் இந்தப்பாடசாலையின்; அபிவிருத்திச் சங்க செயலாளர் முகம்மட் ஜவாத், முன்னாள் செயலாளர் முகம்மட் ஸாதுலி,பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர் ஸஹீலா அப்துர் ரஹ்மான் உட்பட பாடசாலையின் ஆசிரியைகள் பெருமளவிளான இப்பாடசாலையின் பழைய மாணவிகள் கலந்து கொண்டனர்.