காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

0
202

புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோத்தர் பிரிவுகள் மற்றும் காத்தான்குடியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டன.

இன்று காத்தான்குடி 6ம் குறிச்சி 162 கிரா உத்தியோகத்தர் பிரிவு, 164 பி.கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை,காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் அவர்களின் மேற்பார்வையில் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்றது

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ உதய ஸ்ரீதர் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச் அஸ்பர் ஆகியோரின் வழிநடாத்தலில் உத்தியோகத்தர்களும் இத்தடுப்பூசி போடும் நடவடிக்கைக்கு பூரண பங்களிப்பு செய்ததுடன் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.